486. தீவிரவாதம் சார்ந்த கேள்விகள் - டைம்ஸ் நாளிதழின் மக்கள் சர்வே
பாகிஸ்தான் அரசு மும்பைத் தாக்குதலுக்கு ஆதரவு அளித்ததா என்ற கேள்விக்கு, டைம்ஸ் சர்வேயில் 88% மக்கள் ஆம் என்று பதில் சொல்லியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!
மற்ற சில கேள்விகளும், சர்வே முடிவுகளும்: ஒரு பார்வை
1. உள்நாட்டு பாதுகாப்பை ராணுவம் அல்லது ஒரு ஃபெடரல் அமைப்பு ஏற்க வேண்டுமா ?
ஆம் - 77 %
இல்லை - 18%
2. பாகிஸ்தானுடன் அனைத்து வகை உறவுகளையும் இந்தியா முறித்துக் கொள்ள வேண்டுமா ?
ஆம் - 73% (அதாவது கிட்டத்தட்ட நான்கில் மூன்று பங்கு பேர், இதே கருத்தை எனது சமீபத்திய பதிவு ஒன்றில் சொல்லியிருந்தேன்!)
இல்லை - 25%
3. இந்தியாவின் மற்ற இடங்களின் அமைதிக்காக காஷ்மீரத்தை தாரை வார்க்க வேண்டுமா ?
இல்லை - 76% (காஷ்மீர் இந்தியா வசம் இருக்கத் தான் வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக உள்ளார்கள்!)
ஆம் - 24%
4. வளர்ந்த நாடுகளின் (இஸ்லாமிய நாடுகளை நோக்கிய) தவறான கொள்கைகளின் விளைவால் இந்தியாவில் தீவிரவாதம் பெருகியதா ?
ஆம் - 61%
இல்லை - 35%
5. பாகிஸ்தானிலும், பங்களாதேஷிலும் அமைந்துள்ள தீவிரவாத முகாம்களை இந்தியா அழிக்க வேண்டுமா ?
ஆம் - 69% (இப்படி அழிப்பதால், பெரிய அளவில் போர் மூண்டு விடும், பாகிஸ்தான் நம் மீது அணுகுண்டு வீசி விடும் என்று பெருவாரியான மக்கள் நம்பவில்லை, அஞ்சவும் இல்லை என்பது கவனிக்க வேண்டியது!)
இல்லை - 26% (இவர்கள் சற்று பயந்தவர்கள் :-) )
மேலே விடுபட்ட கேள்விகளுக்கான சர்வே முடிவுகளை (நகர வாரியாகவும் சதவிகிதம் தரப்பட்டுள்ளது) கீழே உள்ள படங்களில் காணலாம்.
நன்றி: டைம்ஸ் ஆஃப் இண்டியா
.
3 மறுமொழிகள்:
test..
மக்கள் சர்வே பிரயோசனப்படாது.மகேசன் சர்வேதான் இங்கு அரசியலில் முக்கியம்!
suratha/y
உள்ளதைக் கூறுவதில் தப்பில்லையே?
'பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு போர் தொடங்குவது தீர்வல்ல'
முகர்ஜி
நாங்கள் உங்களுக்கு என்ன செய்தோம்?
ஏன் 1988இல் இந்திய ராணுவம் ஈழத் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தி 10000 மக்களை அழித்தது?
நாங்கள் மெலியவர்கள்!!!
பாகிஸ்தானியர்கள் வலியவர்கள்!!!
Post a Comment